[ Rangasamy ] புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா சென்னை மருத்துவமனையில் அனுமதி !! -01

[ Rangasamy ]

புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா சென்னை மருத்துவமனையில் அனுமதி


இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகரித்து வருகிறது. புதுவை மாநிலத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Rangasamy

Also Read : சீனாவின் சதி – அமெரிக்காவிடம் சிக்கிய ரகசிய ஆவணங்கள் – உலக நாடுகள் அதிர்ச்சி !!

இந்நிலையில் புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு தற்போது கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பே உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் பரிசோதனை முடிவுகள் வெளியாகின அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து புதுவை முதல்வர் ரங்கசாமி சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் தேர்தல் வெற்றி, பதவியேற்பு நிகழ்ச்சி, எம்எல்ஏக்கள் கூட்டம் என கடந்த சில நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என முதல்வர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read : சீனாவின் சதி – அமெரிக்காவிடம் சிக்கிய ரகசிய ஆவணங்கள் – உலக நாடுகள் அதிர்ச்சி !!


Star Tamil News   |    Rangasamy

Leave a Reply

%d bloggers like this: