[ Aswin ] கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா நோய் தொற்று !!

[ Aswin ]

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா நோய் தொற்று


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். சென்னையை சேர்ந்த அஸ்வின் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து பாதியில் விலகினார். கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தனது குடும்பத்தினர் வைரசுக்கு எதிராக என்னுடைய போராடி வரும் நிலையில் அவர்களுக்காக அவர்கள் அருகிலேயே இருப்பது அவசியம் அவை ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார்.

Aswin

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அஸ்வினின் மனைவி பிரீத்தி உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது

எங்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் 6 பேருக்கும் சிறியவர்கள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 முதல் 8 நாட்கள் மிகவும் மோசமாக இருந்தது. கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் தனிமையில் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்வது முக்கியமானது. என அவர் கூறியுள்ளார்.

கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து இதுவரை 5க்கும் அதிகமான வீரர்கள் விலகியுள்ளனர். ஒருசில வீரர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.


Star Tamil News  |  Aswin

Leave a Reply

%d bloggers like this: