[ Corona Death ] முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் !! 02

[ Corona Death ]

முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்


முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன் (வயது 72) கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலமானார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது மனித வெடிகுண்டால் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

Corona-death

Also Read : ஏவுகணை தாக்குதல் – மனைவி உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்த கணவர் !!

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது இது தொடர்பான பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இந்த படுகொலை வழக்கின் விசாரணை சிபிஐ அதிகாரியான ரகோத்தமன் தலைமையில் நடைபெற்றது.

ரகோத்தமன் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் பிறந்தவர் தற்போது அவர் குடும்பத்தினருடன் கள்ளக்குறிச்சியில் வசித்து வந்தார். பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற ரகோத்தமன் சிபிஐயில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். இந்தியாவில் பல மாநிலங்களில் பணியாற்றி சிபிஐ தலைமை புலனாய்வு அதிகாரி என்ற நிலைக்கு உயர்ந்தார். 1991 ஆம் ஆண்டு நிகழ்ந்த ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்து சர்வதேச அளவில் பலரால் அறியப்பட்டார்.

தனது ஓய்வுக்கு பின்னர் அவ்வப்போது ஊடகங்களில் தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார் முக்கியமாக பேரறிவாளனை மிரட்டியே வாக்குமூலம் பெற்றதாக ரகோத்தமன் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதை முன்வைத்து பல தரப்பினரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கூறிவந்தனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரகோத்தமன் சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை ரகோத்தமனின் சொந்த ஊரான பாண்டூர் கிராமத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Also Read : ஏவுகணை தாக்குதல் – மனைவி உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்த கணவர் !!


Star Tamil News  | Corona Death

Leave a Reply

%d bloggers like this: