[ Corona Death ] முன்னாள் இந்திய பிரதமரின் மகன் கொரோனாவுக்கு பலி !! 06

[ Corona Death ]

முன்னாள் இந்திய பிரதமரின் மகன் கொரோனாவுக்கு பலி


ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித் சிங் இன்று கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார் அவருக்கு வயது 82.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அஜித் சிங் டெல்லி அருகே கூர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

Also Read : பாஜக பிரமுகரிடம் 7.5 கோடி ரூபாய் மோசடி – ஹரிநாடார் கைது

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அஜித் சிங் உயிரிழந்தார். இது குறித்த அவரது மகனும் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியின் மூத்த தலைவருமான ஜெயந்த் சவுத்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அஜித் சிங்கின் மனைவி பெயர் காயத்ரி தேவி இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். முன்னாள் பிரதமர் சரண் சிங் மகனான அஜித் சிங் 1939 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி பிறந்தார்.

Corona-death

 

சரண் சிங் உருவாக்கிய லோக்தளம் கட்சி ஜனதா கட்சியுடன் இணைந்து பின்னர் அஜித் சிங் காலத்தில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியாக உருவெடுத்தது. அதன் நிறுவன தலைவராக இருந்து வந்தார். மேலும் முன்னாள் பிரதமர்கள் விபி.சிங், வாஜ்பாய், நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரது ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக 4 முறை பதவி வகித்துள்ளார்.

 

Also Read : பாஜக பிரமுகரிடம் 7.5 கோடி ரூபாய் மோசடி – ஹரிநாடார் கைது

Star Tamil News | Corona Death

Leave a Reply

%d bloggers like this: