[ Congress ] காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் கொரோனாவுக்கு பலி !! -01

[ Congress ]

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் கொரோனாவுக்கு பலி


இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சாதவ் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார்.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராஜீவ் சாதவுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து புனேவில் உள்ள ஜகாங்கீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மருத்துவக் குழுவினரின் பிரத்தியேக கண்காணிப்பில் தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி ராஜீவ் சாதவ் காலமானார்.

Congress

Also Read : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள் !!

ராஜு சங்கர் ராவ் சாதவ் 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் பிறந்தார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஹிங்கோலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். விதர்பா மண்டல காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக உருவெடுத்து வந்த நிலையில் அவரது மறைவு காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ராஜீவ் சாதவின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் மூலம் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் என் நண்பர் ராஜீவ் சாதவின் இழப்பு வேதனை அளிக்கிறது.

ராஜீவ் சாதவ் ஆற்றல் மிக்கவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுடன் பிணைந்த அரசியல் தலைவர் . அவரின் மறைவு நமக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Also Read : கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சந்திக்க தடை – தமிழக அரசு !!


Star Tamil News  |  Congress 

Leave a Reply

%d bloggers like this: