[ INC TV ] காங்கிரஸ் கட்சி சார்பாக டிவி சேனல் தொடங்கப்பட்டது !! -03

[ INC TV ]

காங்கிரஸ் கட்சி சார்பாக டிவி சேனல்  தொடங்கப்பட்டது


காங்கிரஸ் கட்சிக்கான பிரத்தியேகமாக டிவி மற்றும் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் இன்று அறிவித்துள்ளார் இதன் மூலம் கட்சியின் பிரச்சாரங்கள் மற்றும் கருத்துக்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்று காலை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் INC TV என பெயரிடபட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் சேனல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுசெயலாளருமான மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜீவாலா , மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா போன்ற முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Inc-Tv

INC TV சேனலின் ஒளிபரப்பானது தேசிய பஞ்சாயத்துராஜ் தினமான ஏப்ரல் 24ம் தேதி தொடங்கப்படும் எனவும் தினமும் 8 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் கட்சியின் கருத்துக்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஆளும் பாரதிய ஜனதா அரசு அக்கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறது. அந்த யூடியூப் சேனலை 36 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News                     

Leave a Reply

%d bloggers like this: