( Congo )  தங்க மலை கண்டுபிடிப்பு தங்கத்தை அள்ளி சென்ற காங்கோ நாட்டு  மக்கள். வீடியோ வைரல் 

( Congo ) போட்டி போட்டு  தங்கத்தை அள்ளி சென்ற காங்கோ நாட்டு  மக்கள்.

Star Tamil News

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள ஏழ்மையான நாடு காங்கோ ஆனால் இந்நாட்டில் கனிம வளங்கள் அபரிமிதமாக கொட்டிக்கிடக்கின்றன இந்த நாட்டில் தங்கம், தாமிரம், வைரம் போன்ற கனிம வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன மேலும் சமீபத்தில் புதிதாக ஒரு தங்க மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Congo

Congo

காங்கோ நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பிராவா எனும் கிராமத்தில் தான் புதிதாக தங்கமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்த மலை 80% வரை தங்கம் நிறைந்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகின.

இதைக் கேள்விப்பட்ட அந்நாட்டு மக்கள் மண்வெட்டி கடப்பாரையுடன் சாரை சாரையாக அந்த கிராமத்தை நோக்கி படையெடுத்து மலையை தோண்ட ஆரம்பித்தனர் தோண்டத் தோண்ட தங்கம் அபரிமிதமாக கிடைக்க தொடங்கியதால் உற்சாகமான மக்கள் தங்களால் முடிந்த அளவு தங்கத்தை அள்ளிச் அள்ளி சென்றனர்.

இதை அறிந்த காங்கோ அரசு தங்கம் தோண்டுவதை தடுக்க நாட்டு காவல்துறையை அனுப்பியுள்ளது இதுவரை அள்ளிச் சென்ற தங்கத்தை பொதுமக்கள்   அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.

காங்கோ மக்கள் தங்கத்தை அள்ளிச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

வைரல் வீடியோ


Star Tamil News

Leave a Reply

%d bloggers like this: