Clouded leopard -அழிவின் விளிம்பில் படை சிறுத்தைகள்-01

Clouded leopard – அழிவின் விளிம்பில் படை சிறுத்தை இனம்

Star Tamil News

உலகில் வாழும் அரிய வகை உயிரினங்களில் படை சிறுத்தைகள் இனமும் ஒன்று இந்த வகை சிறுத்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து அழிவின் விளிம்பு நிலையில் உள்ளதாக வன உயிரியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட வால்,  கூர்மையான பற்கள்,  குறுகிய கால்கள் கொண்ட இவ்வகை சிறுத்தையின் உடலில் மேகங்களை போன்ற பட்டைகளை கொண்டுள்ளதால் இந்த சிறுத்தையை  Clouded Leopard அல்லது தமிழில் படை சிறுத்தை என அழைக்கப்படுகிறது சிறுத்தை வகைகளிலேயே மிகவும் வேகமாக மரம் ஏறும் ஆற்றல் பெற்றது இந்தவகை சிறுத்தைகள்.

தெற்காசியாவில் இந்தியா, நேபாளம் பர்மா மலேசியா போன்ற நாடுகளில் மட்டுமே காணப்படும் இவ்வகை சிறுத்தைகள் உலகளாவில் 2008ஆம் வருடம் 10000 என்கிற அளவில் இருந்து தற்போது 1000 எண்ணிக்கைக்கு  கீழ் குறைந்துள்ளது என்பது வன உயிரியல் ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.

Clouded-leopard

படை சிறுத்தை

இந்தியாவில் இமயமலை அடிவாரத்திலும் வட கிழக்கு மாநிலங்களிலும் பரவலாக காணப்பட்ட இவ்வகை சிறுத்தையை இறைச்சிக்காகவும் இதன் எலும்புகளை மருத்துவ தேவைகளுக்காகவும் வேட்டையாடிதன் விளைவாக இந்த வகை சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டது என 1861 ஆம் ஆண்டு கருதப்பட்டது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அடர்ந்த காடுகளில் இவ்வகை சிறுத்தைகள் இருப்பதை அடையாளம் கண்டனர்.

மேகாலயா மாநில விலங்கு

தற்போது இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் உள்ள டாம்ப்பா புலிகள் சரணாலயத்தில் மட்டுமே இவ்வகை படை சிறுத்தைகள் சிறிய எண்ணிக்கை இருப்பதாக கருதப்படுகிறது இந்த படை சிறுத்தைகள் மேகாலயா மாநிலத்தின் மாநில விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது இந்த அரிய வகை சிறுத்தைகளை அழிவிலிருந்து காப்பாற்ற அரசாங்கங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் மொத்தமாக இந்த இனம் அழியும் சூழ்நிலை ஏற்படும் என வன உயிரியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.

அடர்ந்த காடுகளில் மட்டுமே வாழும் இவ்வகை  சிறுத்தைகள் மனிதர்களின் கண்களுக்கு அரிதாகவே தென்படும் இந்நிலையில் இந்திய வனத்துறையை சேர்ந்த பிரவீன் கஸ்வான் என்கிற IFS அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் எடுத்த படத்தின் படைசிறுத்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

https://twitter.com/ParveenKaswan/status/1368942150776360961?s=19


Star Tamil News                  clouded leopard

Leave a Reply

%d bloggers like this: