Mars : செவ்வாய் கிரகத்திலும் கொரோனாவை பரப்பாதீர்கள் சீனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் !!-01

[ mars ]

செவ்வாய் கிரகத்திலும் கொரோனாவை பரப்பாதீர்கள் சீனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்


செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் மட்டுமே இதுவரை வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளன. அதில் அமெரிக்கா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் மட்டுமே செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சீனா தியான்வென்1 என்னும் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்வதற்காக கடந்தாண்டு ஹெனன் தீவில் இருந்து விண்ணில் செலுத்தியது அந்த விண்கலம் நேற்றைய தினம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிரங்கியது.

Mars

Also Read : காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் கொரோனாவுக்கு பலி !!

சீனாவின் தியான்வென்1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியுள்ள நிலையில் அதில் உள்ள ரோந்து வாகனம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள், பாறைகள் மற்றும் நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

6 சக்கரங்களை கொண்ட இந்த விண்கலத்தின் மொத்த எடை 240 கிலோ ஆகும். இதில் ஆறு முக்கிய அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மூன்று மாதங்கள் அது செவ்வாயின் மேல் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசின் தாய் தேசமாக கருதப்படும் சீனா செவ்வாய் கிரகத்திலும் கொரோனா வைரஸை பரப்பி விடாமல் இருந்தால் சரி என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Also Read : கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சந்திக்க தடை – தமிழக அரசு !!


Star Tamil News   |   Mars

Leave a Reply

%d bloggers like this: