ஜோ பைடன் அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ள சீனா!! -03

ஜோ பைடனுக்கு மிரட்டல் விடுத்துள்ள சீனா

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் பழைய கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நெருப்புடன் விளையாட நினைக்கக்கூடாது என ஜோ பைடன் தலைமையிலான புதிய அரசுக்கு சீனா மிரட்டல் விடுத்துள்ளது.

சீனப் புரட்சியின் காரணமாக அங்கிருந்து தப்பிய முன்னாள் சீன ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வாழும் நாடான  தைவானை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என நீண்டகாலமாக சீனா கூறி வருகிறது தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கைகள் மூலம் தைவானை கைப்பற்றுவோம் என சீனா நீண்டகாலமாக மிரட்டல் விடுத்து வருகிறது.

ஜோ-பைடன்

China

தைவானை விழுங்க துடிக்கும் சீனாவிடமிருந்து அமெரிக்கா தைவானை பாதுகாத்து வருகிறது கடந்த ஆட்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தைவானுக்கு ராணுவ ரீதியாக பல்வேறு  உதவிகளை செய்துவந்தார் அது குறித்து  சீனா விடுக்கும் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் தனது முழு ஆதரவை தைவான்   நாட்டுக்கு அளித்துவந்தார்.

இந்நிலையில் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் ட்ரம்ப்க்கு அடுத்து புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் அரசுக்கு சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் மிரட்டலான  கோரிக்கையை விடுத்துள்ளார் அமெரிக்கா தனது முந்தைய கால தீவிர தைவான் ஆதரவு கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் நெருப்புடன் விளையாட நினைக்கக் கூடாது தைவான் பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து செயல்படவேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: