[ China ] மஞ்சள் நிறமாக  மாறிய சீனா தலைநகர்  பீஜிங் !!-01

China மஞ்சள் நிறமாக  மாறியது சீனா தலைநகர்  பீஜிங்

சீன தலைநகர் பீஜிங்கில் மணல் புயல் காரணமாக நகரமே மஞ்சள் நிறமாக காட்சி அளிக்கிறது. சீனாவின் வடமேற்கு திசையிலிருந்து வீசும் இந்த மணல் புயல் காரணமாக பீஜிங் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

China

China

கொரானா பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டுவரும் சீன மக்களுக்கு மணல் புயல் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவு மணல் புயலின் தாக்கம் நிலவுகிறது தலைநகர் பீஜிங்கில் காற்று மாசுபாடு அளவு கன மீட்டருக்கு 500 மைக்ரான் என்ற உச்சபட்ச அளவை எட்டியுள்ளது சில இடங்களில் இதன் தாக்கம் 2000 மைக்ரான் அளவு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் நுரையீரலில் நுழையக்கூடிய PM 2.5 அளவு நுண்ணிய துகள்கள் ஒரு கன மீட்டருக்கு 300 என்ற அளவில் பரவியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

 காடுகள் அழிக்கப்பட்டதின் விளைவு

சீனாவின் வடமேற்கு திசையில் இருந்த காடுகளை அழித்ததன் விளைவாக அதன் அருகே உள்ள பாலைவன பகுதியில் இருந்து மணல் புயல்  எந்த தடுப்பும் இன்றி சீன நகரங்களை தாக்கி வருகிறது. இதையடுத்து   சுவாச கோளாறு உள்ளவர்கள் முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பீஜிங் நகர நிர்வாகம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: