[ Marathon ] சீனாவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி !!

[ Marathon ]

சீனாவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி


சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள மஞ்சள் நதி ஸ்டோன் வனப்பகுதியில் நடைபெற்ற மாரத்தான்  ( Marathon ) போட்டியின் போது திடீரெனப் பெய்த கனமழையில் சிக்கி போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெயியான் நகரத்தின் அருகே அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில் நேற்று முன்தினம் 100 கிமீ தொலைவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் இருந்தும் வந்திருந்த 172 பேர் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கிய சில மணி நேரங்களில். அந்த மலைப்பகுதியில் திடீரென வானிலை மோசமடைந்தது. அப்போது பல வீரர்கள் 25 முதல் 30 கிமீ தொலைவில் சென்று கொண்டிருந்தனர்.

Marathon

Also Read : கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சந்திக்க தடை – தமிழக அரசு !!

இந்நிலையில் பலத்த காற்றுடன் உறைபனி விழுந்தது. மேலும் அங்கு கன மழையும் கொட்டித் தீர்த்தது.‌ இதில் வீரர்கள் பலர் சிக்கி கொண்டனர். உடனடியாக இதுகுறித்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாரத்தான் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

அதையடுத்து மலை பகுதிகளில் சிக்கியுள்ள வீரர்களை மீட்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன. சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.‌ இதனிடையே அன்று இரவு மலைப்பகுதியில் மீண்டும் வானிலை மோசமடைந்ததால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.‌

இதையடுத்து நேற்று அதிகாலை வானிலை சீரானதும் மீண்டும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. அப்போது உயிரிழந்த 21 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதேவேளையில் போட்டியாளர்கள் 151 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். அவர்களில் 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெயியான் நகர மேயர் தெரிவிக்கையில் போட்டியின் போது 25 முதல் 30 கிலோ மீட்டருக்கு இடையிலான உயரமான பகுதியில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் மலை பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் கன மழை பெய்தது. அதன் காரணமாக வெப்பநிலை கடுமையாக குறைந்து‌ எனவும்.

எதிர்பாராத இந்த வானிலை மாற்றத்தால் துயர மரணங்கள் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Also Read : இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்கள் !!


Star Tamil News  | Marathon

Leave a Reply

%d bloggers like this: