[ China ] சீனாவின் சதி – அமெரிக்காவிடம் சிக்கிய ரகசிய ஆவணங்கள் – உலக நாடுகள் அதிர்ச்சி !! -01

[ China ]

சீனாவின் சதி அமெரிக்காவிடம் சிக்கிய ரகசிய ஆவணங்கள் உலக நாடுகள் அதிர்ச்சி


கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய் பல உலக நாடுகளுக்கும் பரவியது. அதன் தாக்கம் தற்போது வரை குறையவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவலின் 2வது அலை தற்போது அதிதீவிரமாக உள்ளது.

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து இந்த கொரோனா வைரஸ் பரவியதாகவும் இது சீன விஞ்ஞானிகளால் திட்டமிட்டு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என எழுந்த குற்றச்சாட்டுகளை வழக்கம்போல அந்நாடு மறுத்தது.

இந்த நிலையில் சார்ஸ் கொரோனா வைரஸ் என்னும் வைரசை செயற்கையாக உருவாக்கி அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டிருந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த திட்டங்கள் குறித்த சீன ( China ) ராணுவத்தின் ரகசிய கோப்புக்கள் அமெரிக்க அரசிற்கு கிடைத்துள்ளதாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

China

China

Also Read : மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் !!

அதில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே 2015ம் ஆண்டில் சீனாவின் ராணுவ ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இணைந்து சார்ஸ் கொரோனா என்கிற ஒரு வைரசை உருவாக்கும் திட்டத்தை தயாரித்தனர். இந்த வைரஸை தேவைப்படும் சமயத்தில் உயிரி ஆயுதமாக பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். போர்க்காலங்களில் மட்டுமல்லாமல் தன்னை எதிர்க்கும் நாடுகள் மற்றும் பொருளாதாரத்தில் தன்னுடன் போட்டி போடும் நாடுகளின் மீதும் இந்த வைரசை பயன்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

அதேபோல் இந்த வைரஸ் இயற்கையாக உருவானது போன்று தோன்றும் அளவுக்கு இதன் ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும் எதிர்வரும் காலங்களில் உலக நாடுகளால் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அதை மறுக்கும் அளவுக்கு இயற்கையானதாக இந்த வைரஸ் இருக்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த ரகசிய ஆவணங்கள் தற்போது அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. சீனாவின் இந்த கீழ்த்தரமான திட்டங்கள் தொடர்பான ஆவணங்களால் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read : மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் !!


Star Tamil News   |    Chain 

Leave a Reply

%d bloggers like this: