[ Child Sold ] குழந்தையை 18 லட்ச ரூபாய்க்கு விற்று சுற்றுலா சென்ற தம்பதிகள் !!

[ Child Sold ]

குழந்தையை 18 லட்ச ரூபாய்க்கு விற்று சுற்றுலா சென்ற தம்பதிகள்


சீனாவில் தங்களது 2 வயது மகனை ரூ.18 லட்சம் ரூபாய்க்கு விற்ற  தம்பதிகள் அந்த பணத்தில் சுற்றுலா சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா தலைநகர் பெய்ஜிங் நகரில் வசித்து வரும் ஜி என்பவர் தனது இரண்டாவது மனைவியின் பணி சுமையை போக்குவதற்காக தனது 2 வயதேயான குழந்தையை விற்றுள்ளார். இந்த குழந்தையை ஜி தனது இளைய சகோதரர் லின் என்பவருக்கு விற்றுள்ளார்.

இந்நிலையில் குழந்தையை பார்க்க விரும்பிய 2வது மனைவி ஜியிடம் அது பற்றி தெரிவித்துள்ளார்கள். உடனே ஜியும் தனது சகோதரனிடம் இதுகுறித்து கூறி குழந்தையை தன்னுடன் அழைத்து வந்து மனைவியிடம் காட்டியுள்ளார். ஆனால் அதன் பின்னர் குழந்தையை லின்னிடம் அவர்கள் ஒப்படைக்கப்படவில்லை.

Child-Sold-சீனா

இதைத்தொடர்ந்து ஜியின் சகோதரர் லின் நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உடனடியாக காவல்துறையினர் ஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையின்போது ஜி தனது குழந்தையை $24,400 ( இந்திய மதிப்பில் சுமார்) 18 லட்ச ரூபாய்க்கு விற்று அந்த பணத்தில் தனது 2வது மனைவியுடன் ஜாலியாக இன்பசுற்றுலா சென்று வந்ததும் தெரியிவந்துள்ளது.

இதையடுத்து ஜி தம்பதிகள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் இதற்கு முன்பே ஜியின் முன்னாள் மனைவிக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளை விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அதுகுறித்து போலீசார் விசாரணையை மேற்கொள்ளவில்லை . சீனாவில் சமீபகாலமாக குழந்தைகளை பணத்திற்காக விற்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

Also Readதேர்தல் தோல்விக்கு காரணம் என்ன ? மநீம கூட்டத்தில் காரசார விவாதம்

Star Tamil News | Child Sold

Leave a Reply

%d bloggers like this: