[ Chennai ] ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் & 251 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது !!

[ Chennai ]

ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் & 251 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது


சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய் நாட்டில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவிலான தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து விமான நிலைய சுங்க துறை அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த விமானத்தில் வந்த அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த கருணாமூர்த்தி என்பவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாகவும் பதற்றமாகவும் பதில் அளித்ததை தொடர்ந்து அதிகாரிகளும் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் வீடுகளை சுத்தம் செய்யும் வேக்கம் கிளீனர் கருவி இருந்தது. அதை சந்தேகத்தின் பேரில் பிரித்து சோதனை செய்து பார்த்தபோது அதன் உள்ளே தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Chennai-சென்னை-விமான-நிலையம்

அவரிடம் இருந்து 12.21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 251 கிராம் தங்கத்தை சுங்க துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து கருணாமூர்த்தியிடம் சுங்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும் இதே போன்று நேற்றைய தினம் தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த தான்சானியா நாட்டை சேர்ந்த இரண்டு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்த போது அவர்கள் 15.5 கிலோ ஹெராயின் போதை பொருளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தான்சானியா நாட்டை சேர்ந்த அந்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ள சுங்கத்துறையினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அவர்கள் கடத்தி வந்த ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 100 கோடி இருக்கும் என சுங்க துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ ஒன்றை சுங்க துறையினர் வெளியிட்டுள்ளனர்.

 

Also Read : தண்ணீரில் கலந்து குடிக்கும் புதிய கொரோனா மருந்து – மத்திய அரசு ஒப்புதல் !!


Star Tamil News   |    Chennai

Leave a Reply

%d bloggers like this: