[ Chad Country ] சாட் நாட்டு அதிபர் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார் !!-01

[ Chad Country ]

சாட் நாட்டு அதிபர் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்


ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சாட் நாட்டின் அதிபர் இத்ரிஸ் டெபி இட்னோ அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chad-country

ராணுவ அதிகாரியாக இருந்து பின்னர் 1991ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகள் சாட் நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்தவர் இத்ரிஸ் டெபி இட்னோ. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அந்நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றிருந்தார்.

இதைத்தொடர்ந்து அந்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியில் அதிபர் இத்ரிஸ் டெபி இட்னோ கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது இது அந்நாட்டு மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அடுத்த 18 மாதங்களுக்கு அதிபரின் மகன் மகாமத் டெபி தலைமையிலான கவுன்சில் நாட்டை வழிநடத்தும் என ராணுவம் அறிவித்துள்ளது

மேலும் அந்நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளதாகவும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகம் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Star Tamil News    |      Chad Country 

Leave a Reply

%d bloggers like this: