[ CBSE Exam Result ] 10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் ஜூன் 3ம் வாரத்தில் வெளியீடு – சிபிஎஸ்இ அறிவிப்பு !!

[ CBSE Exam Result ]

10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் ஜூன் 3ம் வாரத்தில் வெளியீடு – சிபிஎஸ்இ அறிவிப்பு


சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் மே 4ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை நடைபெறும் என சி.பி.எஸ்.இ அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதில் 10ம் வகுப்புக்கான தேர்வை 21,50761 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை 14,30243 மாணவர்களும் எழுத இருந்தனா்.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக தீவிரம் அடைந்ததையடுத்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல +2 பொது தேர்வும் ஒத்திவைக்கபடுவதாகவும் அறிவிப்பு வெளியாகின. கொரோனா நோய் தொற்று நிலவரம் குறித்து ஜூன் 1ம் தேதி சிபிஎஸ்இ ஆய்வு செய்த பின் +2 தேர்வுக்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3வது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

CBSE-exam-result

மேலும் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளதால் மாணவர்களுக்கு உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Star Tamil News  |   CBSE Exam Result

Leave a Reply

%d bloggers like this: