03-நிலக்கரி ஊழல் வழக்கில் மம்தாவின் மருமகனுக்கு சிபிஐ நோட்டீஸ் – கைது செய்யபடுவாரா?

நிலக்கரி ஊழல் வழக்கில் மம்தாவின் மருமகனுக்கு சிபிஐ நோட்டீஸ் – கைது செய்யபடுவாரா?
CBI team had reached the residence of tirinamool Congress mp and mamatha’s nephew abhishek in Kolkata to give him a summon

கொல்கத்தா:

பரபரப்புக்கு பஞ்சமில்லாத மேற்கு வங்க அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான அபிசேக் பானர்ஜியின் மனைவிக்கு  சிபிஐ நேரில் சென்று சம்மன் வழங்கியுள்ளது.

சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ அவருக்கு சம்மன் வழங்கியுள்ளது.

Cbi-summon

பிஜேபி vs திரிணமுல் மோதல்

எப்படியும் இந்த தேர்தலில் வென்று தீருவது என்ற முடிவுடன் களமிறங்கிய பாஜகவுக்கு வாய்ப்பாக மம்தா பானர்ஜியின் மருமகனால் பாதிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை பாஜகவுக்கு இழுக்கும் வேலையில் இறங்கியது அடுத்தடுத்த நிர்வாகிகள் வெளியேறியதால் மம்தா சற்று கலங்கி தான் போனார்  இருந்தாலும் கடைசி நொடி வரை போராடுவது என முடிவுடன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் துணை கொண்டு வியூகங்களை வகுத்து வருகிறார். அசுர பலத்துடன் போருக்கு காத்திருக்கும் பாஜகவை வீழ்த்துவது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை தற்போது உணர தொடங்கியுள்ளார்.

அடுக்கடுக்கான நெருக்கடிகளை சந்தித்து வரும் மம்தாவுக்கு சிபிஐ நோட்டீஸ் விவகாரம் புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து அறிக்கை வெளியிட்ட மம்தா பானர்ஜி  நாங்கள் பெரிய பெரிய துப்பாக்கியை எல்லாம் பார்த்துட்டு தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம் உங்க மிரட்டலுக்கு நாங்கள் என்றும் அடிபணிய மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

%d bloggers like this: