[ Britain ] தடுப்பூசிகள் மூலம் 12 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன – பிரிட்டன் !!

[ Britain ]

தடுப்பூசிகள் மூலம் 12 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன – பிரிட்டன்


இங்கிலாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தியதன் மூலம் இதுவரை கிட்டதட்ட 12 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என இங்கிலாந்து அரசின் பொது சுகாதார அமைப்பு ( PHE ) மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி இங்கிலாந்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் மூன்றில் இருவருக்கு குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இதன் மூலம் எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

 

Britain

Also Read : ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் காலமானார் !!

கடந்த மாதம் இறுதிவரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 11700 பேரின் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது என இங்கிலாந்து அரசின் பொது சுகாதார அமைப்பு ( PHE ) தெரிவித்துள்ளது.

மேலும் இந்த காலகட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 33000 பேர் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த PHE புள்ளிவிவரங்களில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து பகுதிகளை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read : அமித்ஷாவை காணவில்லை போலீசில் புகார் !!


Star Tamil News  |  Britain 

Leave a Reply

%d bloggers like this: