[ boy Head Stuck ] குடத்திற்குள் சிக்கி கொண்ட சிறுவனின் தலை கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு !! -01

[ boy Head Stuck ]

குடத்திற்குள் சிக்கி கொண்ட சிறுவனின் தலை கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு


சில்வர் குடத்திற்குள் தலையை சிக்க வைத்துக்கொண்ட 6 வயது சிறுவனை 2 மணி நேரம் கடும் போராட்டத்திற்கு பின்னர் கிராம மக்கள் மீட்டனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தின் அருகே உள்ள சங்கரா பட்டினம் என்னும் கிராமத்தை சேர்ந்த ராஜூ காவியா தம்பதிகளுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த குழந்தைகள் வழக்கம் போல வீட்டின் பின்பக்கம் உள்ள காலி இடத்தில் விளையாட சென்றுள்ளனர். அப்போது ரோகித் என்னும் 6 வயது சிறுவன் சில்வர் குடத்தை தனது தலையில் வைத்து விளையாடி கொண்டிருந்துள்ளான்.

Boy-Head-stuck

Also Read : தடுப்பூசிகள் மூலம் 12 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன – பிரிட்டன் !!

அப்போது திடீரென சில்வர் குடத்திற்குள் சிறுவனின் தலை மாட்டி கொண்டு வெளியே வரவில்லை. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் நீண்ட நேரமாக முயற்சித்தும் சிறுவனின் தலையை வெளியே எடுக்க இயலவில்லை.

இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர் அவர்கள் கட்டர் உதவியுடன் இரண்டு மணி நேரம் போராடி குடத்தை வெட்டி தனியாக பிரித்து சிறுவனை மீட்டனர்.

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க விதிக்கபட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளி திறக்கப்படாத இந்த சூழலில் குழந்தைகள் விளையாடுவதை பெற்றோர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் அறிவுரைகள் கூறினர்.

Also Read : அமித்ஷாவை காணவில்லை போலீசில் புகார் !!


Star Tamil News  | Boy Head Stuck

Leave a Reply

%d bloggers like this: