[ Boris Johnson ] இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் ரத்து !! -01

[ Boris Johnson ]

இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணம் ரத்து


இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து பிரதமர் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இந்தியா வர இருந்தார். அப்போது இங்கிலாந்தில் கொரோனா நோய்தொற்று தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அந்த பயணம் ரத்து செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் இறுதியில் இங்கிலாந்து பிரதமர் இந்தியா பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி இந்தியா வரவிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மும்பை பூனே போன்ற நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்த சுற்றுப் பயணத்தின் போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துதல் உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருந்தன.

இந்நிலையில் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை, பூனே போன்ற நகரங்களில் கொரோனா நோய் தொற்று தீவிரம் அடைந்து வருவதையொட்டி ஊரடங்கு போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .

Boris-johnson

இதன் காரணமாக இங்கிலாந்து பிரதமரின் இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் காணொளிக் காட்சிகள் மூலம் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என இங்கிலாந்து நாட்டின் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Star Tamil News    |    Boris Johnson

Leave a Reply

%d bloggers like this: