01-புதுச்சேரி பிஜேபி என்.ஆர்.காங் கூட்டணி உடைகிறதா ?

புதுச்சேரி பிஜேபி + என்.ஆர்.காங் கூட்டணி உடைகிறதா

5 மாநில சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தொகுதி உடன்பாடு வேட்பாளர் தேர்வு என தீவிரமாக   ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் புதுவையில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி இடையிலான கூட்டணி உடைய உள்ளதாக என் ஆர் காங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்

புதுச்சேரி-பிஜேபி

புதுவையில் கடந்த சில நாட்களாகவே அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நமச்சிவாயம் ஜான் குமார் போன்ற எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் புதுவை சட்டசபைகானா தேர்தலை அறிவித்தது திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது  இந்நிலையில் என்.ஆர்.காங் பிஜேபி அதிமுக பாமக போன்ற கட்சிகள் ஒரே அணியாக இருந்து தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்த்திருந்த வேளையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்காலில் நடந்த பிஜேபி பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிஜேபி தலைமையிலான ஆட்சி புதுவையில் அமையும் என தெரிவித்தது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது

மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகுதிகளில் என் ஆர் காங்கிரஸ் 15 தொகுதிகளையும் அதிமுக பாஜக பாமக போன்ற கட்சிகள் மீதமுள்ள  15 தொகுதிகளை பிரித்துக் கொள்வது என்ற ரீதியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன ஆனால் இதற்கு செவிசாய்க்காத பிஜேபி தங்கள் தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருந்து வருகிறது காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய நமச்சிவாயம் தான் முதல்வர் வேட்பாளர் என்கிற ரீதியில் பிஜேபி காய்களை நகர்த்தி வருகிறது மேலும் என் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் பிஜேபிக்கு தாவியது போன்ற காரணங்களால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி புதுவையில் தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

%d bloggers like this: