[ BJP ] முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்!! – 13

 பிஜேபி முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்

மேற்கு வங்கத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பரப்புரைகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன மேலும் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் எதிர் முகாமுக்கு தாவும் நிகழ்வுகளும் மேற்கு வங்க அரசியலில் தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன .

மேற்கு வங்க அரசியலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜியின் ஆதிக்கத்தால் அதிருப்தியடைந்த அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சாரைசாரையாக பாஜகவில்  இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான யஷ்வந்த் சின்கா திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளது மேற்கு வங்க அரசியலை தாண்டி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஜேபி முன்னாள் அமைச்சர்

Bjp

Bjp

முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான யஸ்வந்த் சின்கா பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பின்னர் பாஜகவில்  தன்னை இணைத்துக்கொண்டார் ஜார்கண்ட் மாநிலம் ஹஜாரியாபாக் மக்களவைத் தொகுதியில்்  வெற்றி பெற்று வாஜ்பாயின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா சில ஆண்டுகளாக தான் கட்சியில் ஓரம்கட்டுப்படுவதாக எண்ணி கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் எனவே பாஜகவின் தலைமையை தீவிரமாக எதிர்த்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

Bjp vs Tmc

Leave a Reply

%d bloggers like this: