பாஜக.,வுக்கு 21- தேமுதிக.,வுக்கு 11 –  தொகுதிகள் ஒதுக்கீடு ?

பாஜக.,வுக்கு 21- தேமுதிக.,வுக்கு 11  தொகுதிகள் ஒதுக்கீடு ?

தமிழக சட்டமன்ற  தேர்தல் ஏப்ரல 6 தேதி நடைபெற இருப்பதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் நேற்று பாமக அதிமுக கூட்டணி உறுதியானது அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது இதற்கான ஒப்பந்தம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்றைய தினம் கையெழுத்தானது

Admk-bjp-alliance

இதையடுத்து பாஜக மற்றும் தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட அதிமுக தரப்பு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 21 தொகுதிகளை ஒதுக்கி உள்ளதாக அதிமுக மற்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இதுகுறித்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை அமித்ஷா முன்னிலையில் வெளியிடப்படும் என தெரிகிறது.

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை

Admk-dmdk-alliance

மேலும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை தமிழக அமைச்சர்களான தங்கமணி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அவர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர் இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

ஜெட் வேகத்தில் முதல்வர்

கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவில் முடித்து விட்டு தேர்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த முதல்வர் முடிவு செய்துள்ளார் எனவே ஓரிரு தினங்களில் அதிமுக கூட்டணியின் தொகுதி உடன்பாடு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

%d bloggers like this: