[ Bill Gates ] பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு !! -03

[ Bill Gates ]

பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு


அமெரிக்கா நாட்டின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவன முன்னாள் தலைவர் பில்கேட்ஸ். கடந்த 1975ம் ஆண்டு பால்ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார் அந்த காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) பில்கேட்ஸ் செயல்பட்டார். அதன் பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பல பதவிகளிலும் இருந்துள்ளார்.

அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த மெலிண்டா கேட்ஸ் என்பவர் மீது பில்கேட்ஸ்க்கு காதல் ஏற்பட ஹவாய் தீவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் கடந்த 2000ம் ஆண்டு பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் சமூக சேவைக்காக அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது. லாப நோக்கம் இல்லாத இந்த அறக்கட்டளையின் வாயிலாக கல்வி சுகாதாரம் பாலின சமத்துவம் போன்ற பல சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Bill-Gates

இந்நிலையில் பில்கேட்ஸ் தம்பதி 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதுதொடர்பாக பில்கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்.

எங்களின் 27 ஆண்டு திருமண வாழ்க்கையில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து விரிந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி அதன் மூலம் பலதரப்பட்ட மக்களுக்கு சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.

எங்களது திருமண வாழ்வை நாங்கள் முடித்துக்கொள்ள முடிவு செய்திருந்தாலும் அறக்கட்டளை தொடர்பான பணிகளில் தொடர்ந்து இணைந்து செயல்பட இருக்கிறோம். எங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை ஒற்றுமையாக இணைந்து தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர்.


Star Tamil News |  Bill Gates

Leave a Reply

%d bloggers like this: