[ Bihar ]  பீகார் மாநில முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி !! -03

[ Bihar ]

பீகார் மாநில முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலி


covid-19 நோய்தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பீகார் மாநிலம் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மேவாலால் சவுத்ரி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பீகார் மாநிலத்தில் நோய் பரவலை தடுக்கும் நோக்குடன் இரவு நேர ஊரடங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தேர்வுகள் ரத்து என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Bihar-பீகார்

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் பீகார் மாநில முன்னாள் கல்வி துறை அமைச்சருமான மேவாலால் சவுத்ரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பீகார் மாநிலத்தின் தாராப்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள மேவாலால் சவுத்ரி நிதீஷ்குமார் தலைமையிலான அரசில் கல்வித் துறை அமைச்சராக இருந்தார் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News      |     Bihar

Leave a Reply

%d bloggers like this: