[ Bigg Boss ] பிக் பாஸ் சீசன் 5ல் நடிகை ஷகிலாவின் மகள் மிளா ?

[ Bigg Boss ]

பிக் பாஸ் சீசன் 5ல் நடிகை ஷகிலாவின் மகள் மிளா ?


ஸ்டார் விஜய் தமிழில் 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கும் பிக் பாஸ் சீசன் கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கியது.

இந்த ஆண்டு வழக்கம் போல ஜூன் மாத இறுதியில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கவிருப்பதாகவும் அதற்கான பணிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bigg-boss

மேலும் பிக் பாஸ் சீசன் 5ல் நடிகர் ராதாரவி, மன்சூர் அலிகான், குக் வித் கோமாளி கனி போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிளா கலந்து கொள்ள இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் குழு மிளாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிளா திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News                               Bigg Boss

Leave a Reply

%d bloggers like this: