Bharat Biotech : ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை – பாரத் பயோடெக் !! -01

[ Bharat Biotech ]

ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை – பாரத் பயோடெக்


இந்தியாவில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ரஷியாவின் ஸ்பூட்னிக் 5 போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் ஜூன் மாதம் முதல் ( குழந்தைகள் ) 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை பாரத் பயோடெக் நிறுவனத்தின் வணிக மேம்பாடு மற்றும் சர்வதேச ஆலோசனை தலைவர் டாக்டர் ரேச்ஸ் எலா தெரிவித்துள்ளார்.

Bharath-biotech

 

Also Read : நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவுக்கு பலி !!

ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர் ரேச்ஸ் எலா கூறியதாவது கடந்த ஆண்டு கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை மேம்படுத்துவதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தினோம் தற்போது எங்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி சோதனைகள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உரிமத்தை பெறக்கூடும் என தெரிவித்தார் .

மேலும் இந்த வருட இறுதிக்குள் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி திறனை 70 கோடி அளவுகளாக உயர்த்த பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது . தடுப்பூசி தயாரிக்கும் எங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு கிடைத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து உருவாக்கி உள்ளோம். மத்திய அரசு சுமார் 1500 கோடிக்கு மேல் தடுப்பூசி ஆர்டர்களை வழங்கி உள்ளது இது எங்கள் வணிகத்தை அதிகரிக்க உதவும் என தெரிவித்தார்.

Also Read : சீனாவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி !!


Star Tamil News  |  Bharat Biotech

Leave a Reply

%d bloggers like this: