[ Bank Merger ] ஏப்ரல் 1 முதல் இந்த 7 வங்கிகளின் காசோலை செல்லாது!!- 01

# Bank Merger #

ஏப்ரல் 1 முதல் இந்த 7 வங்கிகளின் காசோலை செல்லாது


இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள் நிர்வாக வசதி மற்றும் வளரும்  பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்யவும், உலக அளவில் பெரிய வங்கிகளாக உருவாக்கும் நோக்கத்துடன் லாபம் குறைவாக ஈட்டும் மற்றும் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தன.

இதன்படி தேனா வங்கி மற்றும்  விஜயா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடா வாங்கியுடனும் , ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடனும், ஓரியண்டல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரு வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும் இணைக்கப்பட்டது.

Bank-Merger

தற்போது  இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் காசோலைகள் மற்றும் IFSC Code ஆகியவை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செல்லாது என தகவல்கள் தெரிவிக்கின்றன அதன்படி தேனா வங்கி, விஜயா வங்கி, ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, அலகாபாத் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் இந்தியன் வங்கி, யுனைட்டட் இந்தியா வங்கி ஆகிய ஏழு வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செல்லாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏழு வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களின்  வங்கிக் கிளைகளை அணுகி புதிய  காசோலைகள் மற்றும் IFSC Code ஐ பெற்றுக்கொள்ளலாம் எனவும் அல்லது இணைக்கப்பட்ட புதிய வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய IFSC Code ஐ தெரிந்துகொள்ள முடியும் எனவும் வங்கிகள் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Bank Merger                         Star tamil news

Tamil news

Leave a Reply

%d bloggers like this: