[ Ayush 64 ] அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு ஆயுஷ்-64 மருந்து அற்புதமாக பயனளிக்கின்றது – மத்திய அரசு !!

[ Ayush 64 ]

அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு ஆயுஷ்-64 மருந்து அற்புதமாக பயனளிக்கின்றது – மத்திய அரசு


அறிகுறிகள் இல்லாத கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஆயுஷ்64 மருந்து நல்ல பயனுள்ளதாக இருக்கின்றது என மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி என இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையில் இணைந்தது ‘ஆயுஷ்’ துறை ஆகும். மத்திய அரசில் ஆயுஷ் துறைக்கு என்று தனியாக அமைச்சகம் உள்ளது.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தலைமை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் நேற்றைய தினம் இணையம் வாயிலாக அளித்த பேட்டியில் அறிகுறிகள் தெரியாத கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் ஆயுஷ்64 மருந்து சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.

கடந்த 1980ம் ஆண்டு மலேரியாவை நோய் குணப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆயுஷ்64 மருந்து கொரோனா சிகிச்சைக்கு பயன்படுமா என அண்மையில் மூன்று மையங்களில் பரிசோதனைகள் செய்யப்பட்டது.

Ayush

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள கிங் சார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் , மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள தத்தா மேகே மருத்துவ அறிவியல் நிலையம் மற்றும் மும்பையில் உள்ள மாநகராட்சி கொரோனா மையம் உள்ளிட்ட மையங்களில் தலா 70 நோயாளிகளுக்கு இம்மருந்தை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வழக்கமான சிகிச்சைகளுடன் ஆயுஷ்64 மருந்தை சேர்த்து கொடுக்கும் போது அறிகுறிகள் இல்லாத லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் கவலை, மன அழுத்தம், பசி, மகிழ்ச்சி, தூக்கம் போன்ற பிரச்சனைகளுக்கும் ஆயுஷ்64 மருந்து சிறப்பான நல்ல பலன்களை அளிப்பதும் தெரியவந்துள்ளது.


Star Tamil News  |   Ayush 64

Leave a Reply

%d bloggers like this: