[ Flood ] 100 ஆண்டுகள் காணாத  வெள்ளத்தால் தத்தளிக்கும் ஆஸ்திரேலியா நகரங்கள் !!

[ Australia Flood ] – 100 ஆண்டுகள் காணாத  வெள்ளத்தால் தத்தளிக்கும் ஆஸ்திரேலியா நகரங்கள் !!

கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலியா இயற்கை சீற்றங்களால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது காட்டு தீ மற்றும் நில நடுக்கங்களை தொடர்ந்து தற்போது 100 வருடங்களில் இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வெள்ளப்பெருக்கால் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் மற்றும் சிட்னி நகரம் போன்ற பகுதிகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Flood

வெள்ளம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை போக்குவரத்து மின்சாரம் போன்ற சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 10 நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் மற்றும் சிட்னி நகரை சுற்றியுள்ள அணைகள் நிரம்பியுள்ளன 100 வருடங்களில் இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கனமழை மேலும் சில நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .


Star Tamil News                      Australia Flood

Leave a Reply

%d bloggers like this: