05-அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி – கருத்து கணிப்பு முடிவுகள்!!

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி- கருத்துகணிப்பு முடிவுகள்!!

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவித்தது.

Assam-bjp

அதன்படி 120 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது முதல்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1ஆம் தேதி 3 மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும்  என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அசாம் தேர்தல் குறித்தான கருத்துக்கணிப்பை பிரபல சி ஓட்டர்ஸ் நிறுவனம் நடத்தியது அதன் முடிவுகள் தற்போது வெளியிட்டுள்ளது அதில் அசாமில் சார்பானந்தா சோனாவால் தலைமையிலான ஆளும் பாஜக அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் எனவும் காங்கிரஸ் வெறும் 30 சதவீத வாக்குகளை மட்டுமே பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 121 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் சுமார் 76 தொகுதிகளை ஆளும் பாஜக அரசு கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜக வின் 42 சதவீதம் ஓட்டுக்களை பெரும் என  சி ஓட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

%d bloggers like this: