[ Annamalai ] பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு – திமுகவினருக்கு ட்விட்டர் மூலம் பதிலடி-01 !!

Annamalai பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு ஏற்பு – திமுகவினருக்கு ட்விட்டர் மூலம் பதிலடி.

நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கட்சிகள்   வேட்புமனுத்தாக்கல், தீவிர பிரச்சாரம் என பரபரப்பாக சுழன்று  கொண்டிருக்கின்றன.

நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் காலக்கெடு முடிவடைந்த நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது

அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் வேட்புமனு பரிசீலனையின் போது  திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் வழக்கறிஞர்கள் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தன் மீது உள்ள 10க்கும் மேற்பட்ட வழக்குகள் குறித்து வேட்புமனுவில் குறிப்பிடவில்லை எனவே அவரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் இதனால் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைப்பதாக  அறிவிக்கப்பட்டது.பின்னர் பாஜக   தரப்பு வழக்கறிஞர்களின் விளக்கத்தை ஏற்று வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Annamalai

இதைதொடர்ந்து திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் “பயந்துட்டியா குமாரு ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” என்று அண்ணாமலை டுவிட் செய்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Star Tamil News                               

Leave a Reply

%d bloggers like this: