[ Corona Death ] அஞ்சான் பட நடிகர் கொரோனாவுக்கு பலியானார் !! -01

[ Corona Death ]

அஞ்சான் பட நடிகர் கொரோனாவுக்கு பலியானார்

Stay Home Stay Safe


கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அஞ்சான் படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இல்லாத அளவு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்தை கடந்திருக்கிறது.

மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,01,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

Corona-Death

இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்தி நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால் (வயது 52) இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னாள் ராணுவ வீரரான பிக்ரம்ஜீத் கடந்த 2003ம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்து வந்தார். இந்தியில் வெளியான page3, corporate , Kiya Love Story, Rocket Singh உள்ளிட்ட பல வெற்றி படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.


Star Tamil News | Corona Death

Leave a Reply

%d bloggers like this: