[ Ammk ] காலையில் கட்சியில் இனைந்தவருக்கு மாலையில் எம்எல்ஏ சீட் !!- 01

[ Ammk ] காலையில் கட்சியில் இனைந்தவருக்கு மாலையில் எம்எல்ஏ சீட்

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல்       6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.

இதையொட்டி நேற்றைய தினம்  அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்  வெளியானது இதில் பல சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டுள்ளது அவ்வாறு எம்எல்ஏ சீட் மறுக்கப்பட்டவர்களில் சாத்தூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ ராஜவர்மனும் ஒருவர் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அது குறித்து தனது அதிருப்தியை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தார் .

Ammk

Ammk candidate

டிடிவி தினகரனுடன் சந்திப்பு

அதன் தொடர்ச்சியாக இன்று காலை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜவர்மன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜாவின் அழைப்பின் பெயரில் கட்சியின் இணைந்துள்ளேன் எனவும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் செயல்பாடுகளால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடையும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தனது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார் .

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது அதில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட காலையில் கட்சியில் இணைந்தார் எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மாலையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது அரசியலில் ஆச்சரியத்தையும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

எப்படியாவது அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என துடிக்கும் ராஜவர்மன் அதிமுக சார்பாக சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் சகோதரரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தீவிர ஆதரவாளருமான ரவிச்சந்திரனை தோற்கடித்தே தீரவேண்டும் என களம் காண இருக்கிறார் .

( சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவிசந்திரன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் சின்ன மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது )

Ammk

Leave a Reply

%d bloggers like this: