[ Amma Clinic ] அம்மா மினி கிளீனிக்கை அடித்து நொறுக்கிய திமுகவினர் !! -05

[ Amma Clinic ]

அம்மா மினி கிளீனிக்கை அடித்து நொறுக்கிய திமுகவினர்


சென்னையில் நேற்றைய தினம் திமுகவை சேர்ந்த தொண்டர்கள் அம்மா உணவகத்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பான சர்ச்சைகள் ஓய்வதற்குள், இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அம்மா மினி கிளினிக்கை திமுகவினர் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினர் பிரச்சனைகளில் ஈடுபட்டு வருவது அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலினுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Amma-mini-clinic

ஏற்கனவே அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் திமுகவினரால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்திற்குள் நுழைந்த திமுகவினர் அங்கிருந்த பொருட்கள் மற்றும் பெயர் பலகைகளை அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக தொண்டர்களின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து திமுக தலைமை வன்முறையில் ஈடுபட்ட இரண்டு தொண்டர்களை கட்சியிலிருந்து நீக்கியும் மீண்டும் பெயர் பலகையை பொருத்தியும் பிரச்சனையை முடித்து வைத்தது. இதைத்தொடர்ந்து இன்று நாகை மாவட்டத்தில் உள்ள அவரிக்காடு என்கிற இடத்தில் செயல்பட்டு வந்த அம்மா மினி கிளீனிக் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு பல தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுகவினரின் அராஜகங்கள் தொடங்கிவிட்டதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Star Tamil News |  Amma Clinic 

Leave a Reply

%d bloggers like this: