[ America ] நட்பு நாடுகளை பாதுகாக்க எந்த எல்லைக்கு செல்லவும் தயங்க மாட்டோம் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா !!-05

[ America ]

நட்பு நாடுகளை பாதுகாக்க எந்த எல்லைக்கு செல்லவும் தயங்க மாட்டோம் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா


சீனா கடந்த பல வருடங்களாக தனது அண்டை நாடுகளுக்கு குடைச்சல் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. சீனாவின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து அத்துமீறல்களை நிறுத்திக் கொள்ளுமாறு சீனாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அந்தவகையில் தென் சீன கடலில் அமைந்துள்ள தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக அச்சுறுத்தும் வகையில் அந்நாட்டு வான்பரப்பில் சீனா போர் விமானங்களை பறக்க செய்வது விமானம் தாங்கிய கப்பல்களை அந்த நாடுகளுக்கு மிக நெருக்கமாக நிறுத்தி அச்சுறுத்துவது போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இதுகுறித்து தைவான் வெளியிட்ட அறிவிப்பில் சீனாவை பார்த்து தாங்கள் அஞ்சவில்லை எனவும் ஒரு போரை நடத்தி சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

America

இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்ட அறிவிப்பில் அமெரிக்கா தனது நட்பு நாடுகளை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராக உள்ளது எனவும் தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை அச்சுறுத்தும் வேலையை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இந்த நாடுகளுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்க முயன்றால் எங்கள் நட்பு நாடுகளை பாதுகாக்க நாங்கள் எதிர் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Star Tamil News                                                America

Leave a Reply

%d bloggers like this: