அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்!!01

நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்ற அன்பு சகோதரர் அஜித் குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என டுவிட்டரில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார் துணை முதல்வரின் இந்த ட்விட் அஜித் ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தியுள்ளது.

பைக் ரேஸ் கார் ரேஸ் என கலக்கி வரும் நடிகர் அஜித்குமார் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் சமீபகாலமாக ஆர்வம் காட்டி வருகிறார் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith

அஜித்

இந்நிலையில் தமிழ்நாடு ரைபிள் கிளப் சார்பாக மாநில அளவிலான 46வது துப்பாக்கி சுடுதல் போட்டி மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற்றன இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரைபிள் கிளப்பை சேர்ந்த 900 பேர் பங்கேற்றனர் 50க்கும் மேற்பட்ட பிரிவின்கீழ் நடைபெற்ற இப்போட்டியில் அஜித் ஆறு தங்க  பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் இதையடுத்து திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் நடிகர் அஜித்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஓபிஎஸ் வாழ்த்து

இதைத்தொடர்ந்து துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் “தனது அயராத உழைத்தாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச் சகோதரர் திரு அஜித் குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்” என  நடிகர் அஜித்திற்கு டுவிட்டர் மூலம் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

%d bloggers like this: