03-கூட்டணிக் கட்சிகளை அலற விடும் திமுக மற்றும் அதிமுக

கூட்டணிக் கட்சிகளை அலற விடும் திமுக மற்றும் அதிமுக 

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் உச்ச கட்ட பரபரப்பில் உள்ளது கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கறார் காட்டுவதால் 2 அணியிலும் தொகுதி உடன்பாடு எட்டபடாமல் இழுபறி நீடிக்கிறது

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை அதிமுகவின் அடுத்த அரசியல் சக்தியாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அதேபோல திமுக தலைவர் ஸ்டாலின் 50 ஆண்டுகால அரசியல் உழைப்பின் பலனை அறுவடை செய்ய காத்திருக்கிறார் இதனால்  இரண்டு தரப்பும் வெற்றி இலக்கில் சமரசம் செய்ய விரும்பவில்லை

 

முன் எப்போதும் இல்லாத வகையில் திமுக அதிமுக இரண்டு அணியிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் அளவு குறைக்கப்பட்டுள்ளன இதனால் இரண்டு அணியின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது நேற்றைய தினம் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது 12 தொகுதிகள் வரை எதிர்பார்த்து இருந்த மதிமுகவிற்கு நான்கு முதல் ஐந்து தொகுதிகள் வரைதான் ஒதுக்க முடியும் என திமுக தரப்பு கூறியதால் அதிர்ச்சி அடைந்த மதிமுக தொகுதி பங்கீடு குழு பேச்சு வார்த்தையிலிருந்து இருந்து வெளியேறியது இன்று அக்கட்சியின் தலைவர் வைகோவை திமுகவை சேர்ந்த  சாத்தூர் ராமச்சந்திரன்  தங்கம் தென்னரசு  போன்ற பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதைப்போன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தங்களுக்கு 12 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாகவும் ஆனால் திமுக தலைமை 5 அல்லது 6 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறியதால் அதிருப்தி அடைந்து பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி உள்ளது.

அதிமுக

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கி அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது பாஜக உடனான நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் 20 தொகுதிகளுக்கு பாஜக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன பாஜக உடனான தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அதிமுக கூட்டணியில் உள்ள தாமாக உடனான பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது  நேற்று எல் கே சுதிஷ் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு அதிமுக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Leave a Reply

%d bloggers like this: