01-அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிமுக-170 : பாஜக , பாமக ,தேமுதிக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

01-அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிமுக-170 – பாஜக , பாமக ,தேமுதிக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? 
சென்னை :-

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 தேதி  ஒரேகட்டமாக நடைபெறும் என நேற்றைய தினம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதனால் தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

திமுக அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன நேற்றைய தினம் திமுக காங் கட்சிகள் தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலையத்தில் நடந்தது.

Tn-Nda-Alliance

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை

இந்நிலையில் அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்கியுள்ளது அதையொட்டி பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் , மத்திய அமைச்சர் கிசன் ரெட்டி  ஆகியோர் முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இன்று இரவு சென்னை வரும் அமித்சாவுடன் பேச்சுவார்த்தை குழு கலந்து பேசி தொகுதிகள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று மாலை பாமகவுடன் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது நாளைய தினம் தேமுதிக மற்றும் இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக தரப்பில் இருந்து வெளியான தகவல் படி பேச்சுவார்த்தை என்பது ஜஸ்ட் பார்மாலிட்டி தான் ஏற்கனவே பிரதான காட்சிகளின் தொகுதி எண்ணிக்கை இறுதி செய்யபட்டுவிட்டன சம்பிரதாய பேச்சுவார்த்தை மட்டுமே தற்போது நடைபெறுகிறது அதன்படி

அதிமுக-171

பாமக – 29

பாஜக – 26

தேமுதிக-12

தமக – 6

புதிய தமிழகம்-3

ஜான் பாண்டியன் – 2

என்கிற அடிப்படையில் ஓரிரு தினங்களில் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

 

 

 

Leave a Reply

%d bloggers like this: