அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.

கூட்டணி காட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு என உச்சகட்ட பரபப்பில் தமிழக அரசியல் களம் உள்ளது.

இன்று காலை பாஜக அதிமுக தொகுதி பங்கீடு குறித்து அக்கட்சியின் தலைவர் எல்.முருகன் மற்றும் மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி முதல்வர் மற்றும் துனை முதல்வருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் நாளைய தினம் அமித்சா முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Admk-pmk

இந்நிலையில் பாமகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துள்ள அதிமுக பாமகவுக்கு  23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வைத்து  இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதிமுக கூட்டணி தேர்தல் வேலைகளை உற்சாகமாக ஜெட் வேகத்தில் மேற்கொண்டு வருவது எதிர் தரப்பை சற்று கலக்கமடைய செய்துள்ளது

Leave a Reply

%d bloggers like this: