[ Admk ]செய்தியாளர்கள் முன்னிலையில் கதறி அழுத தமிழக பெண் அமைச்சர் -13

[ Admk ] செய்தியாளர்கள் முன்னிலையில் கதறி அழுத தமிழக பெண் அமைச்சர்

வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏவும் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீல் செய்தியாளர்கள் முன்னிலையில் தனக்கும் திமுகவுக்கும் எந்தவித தொடர்பம் இல்லை எனக் கூறி கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நிலோபர் கபீலுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட  வாய்ப்பு வழங்கப்படவில்லை இந்நிலையில் செய்தித்தாள் ஒன்றில் நிலோபர் கபீல் திமுகவுடன் தொடர்பு வைத்துள்ளதால் தான் இந்த முறை அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட்டு மறுக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிட்டிருந்தது .

இதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபீல் செய்தியாளர்களை சந்தித்தார் தனக்கும் திமுகவினருக்கு எந்தவித தொடர்பும் இல்லை அமைச்சர் வீரமணி தான் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் மாமன் மச்சான் என்கிற ரீதியில் பழகி வருகிறார் சில நாட்களுக்கு முன்பு கூட ஏலகிரியில் கான்ட்ராக்ட் தொடர்பாக இருவரும் கூடிப்பேசினார்கள்.

Admk

Admk

மேலும் துரைமுருகனுக்கு எதிராக காட்பாடி தொகுதியில் ராமு என்கிற டம்மி வேட்பாளரை நிறுத்தியுள்ளார் வீரமணி  அதற்கு பரிகாரமாக துரைமுருகனும் அமைச்சர் வீரமணிக்கு எதிராக தேவராஜ் என்கிற டம்மி வேட்பாளரை நிறுத்தி உள்ளார் இவ்வாறு திமுகவினருடன் உறவு வைத்துக் கொண்டு எனக்கும் திமுகவிற்கும் உறவு இருப்பதாக பத்திரிக்கைகளில் எழுத வைக்கிறார் அமைச்சர் வீரமணி.

முசுலீம்கள் வாக்கு

முசுலீம்கள் அதிமுகவுக்கு வாக்கு செலுத்தவில்லை என்பது உண்மை தான்  பாஜக அதிமுக கூட்டணியில் இருப்பதால் முஸ்லிம்கள் யாரும் அதிமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்தவில்லை என் சமுதாயம் வாக்களிக்கவில்லை என்றால் நான் என்ன செய்யமுடியும். கட்சி, சமுதாயம் இரண்டுமே எனது இரு கண்கள் இரண்டுக்கும் என்னால் துரோகம் செய்ய முடியாது எனக்கூறி (கண்கலங்கினார்) என் உயிர் உள்ளவரை அதிமுகவிற்கு விசுவாசமாக இருப்பேன்.

அம்மா ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தவள் நான் அம்மாதான் எனக்கு எம்எல்ஏ சீட் கொடுத்தார் அமைச்சர் பொறுப்பு கொடுத்தார் எக்காலத்திலும் என் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவருக்கும் விசுவாசமாக இருந்து வாணியம்பாடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் குமாரை வெற்றி பெற செய்வது எனது கடமை என அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

[ அமைச்சர் நிலோபர் கபீலின் அப்பாவிதனமான பேச்சு செய்தியாளர்கள் முன்னிலையில் தேம்பி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது ]

Admk Tn Election 2021

Leave a Reply

%d bloggers like this: