அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு!!

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு
admk alliance

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக உடன் முதலில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது இதை தொடர்ந்து மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வந்தது இந்நிலையில் தற்போது அதிமுக தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக

Admk Alliance

அடுத்த கட்டமாக தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் , ஜான் பாண்டியனின் கட்சி,  மூவேந்தர் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது இன்று அல்லது நாளைக்குள் அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிவடையும் என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

%d bloggers like this: