05-அதிமுக கூட்டணியில் பாஜக , பாமக போட்டியிடவுள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல்

அதிமுக கூட்டணியில் பாஜக , பாமக போட்டியிடவுள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி உடன்பாடு போன்றவற்றை விரைந்து முடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்

அதிமுக-பாஜக

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக விற்கு 23 சட்டசபை தொகுதிகளை ஒதுக்கி அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது அதைத்தொடர்ந்து பாஜகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது நேற்று இரவு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார் பாஜக தரப்பில் 33 சீட்டு வரை எதிர்பார்ப்பதாகவும் ஆனால் 20 சீட் வரை கொடுக்க அதிமுக தலைமை முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது பாமகவை விட அதிக தொகுதிகள் வேண்டுமென பாஜக கூறி வந்ததால் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நீண்டு கொண்டு  சென்றது. இந்நிலையில் பாஜக தரப்பில் இருந்து தற்போது பாமகவை போல தங்களுக்கும் 23 தொகுதிகள் ஒதுக்கும்படி கேட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன எனவே விரைவில் அதிமுக பாஜக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் பாமக பாஜக தரப்பிலிருந்து தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக தலைமையிடம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதன்படி

பாஜக தரப்பு கொடுத்துள்ள தொகுதிகளின் பட்டியல் 

ஆயிரம்விளக்கு

விருகம்பாக்கம்

மயிலாப்பூர்

சேப்பாக்கம்

பல்லாவரம்

கோவை வடக்கு

சிங்காநல்லூர்

தொண்டாமுத்தூர்

திருப்பூர்

அரவங்குறிச்சி

ராசிபுரம்

திருவாடனை

வேதாரண்யம்

காரைக்குடி

பரமக்குடி

முதுகுளத்தூர்

மதுரை கிழக்கு

ராமநாதபுரம்

ராஜபாளையம்

நெல்லை

கன்னியாகுமரி

விளவங்கோடு

நாகர்கோவில்

பாமக தரப்பு கொடுத்துள்ள தொகுதிகளின் பட்டியல்

Admk-pmk

கும்மிடிப்பூண்டி

திருத்தணி

எழும்பூர்

சோளிங்கர்

செங்கல்பட்டு

திருப்போரூர்

ஓசூர்

ஆற்காடு

ஆரணி

கலசபாக்கம்

பெண்ணாகரம்

திண்டிவனம்

பாப்பிரெட்டிபட்டி

விக்கிரவாண்டி

அணைக்கட்டு

மேட்டூர்

சங்கராபுரம்

வீரபாண்டி

குன்னம்

ஜெயம்கொண்டம்

பண்ரூட்டி

காட்டுமன்னார்கோவில்

மற்றும் நெய்வேலி

இந்த தொகுதிகளின் பட்டியலை அதிமுக தலைமையிடம் இவ்விரு கட்சிகளும் அளித்துள்ளதாகவும் இதில் பெரும்பாலான தொகுதிகளை ஒதுக்க அதிமுக தலைமை ஒப்புக்கொண்டுள்ளதாக அதிமுக கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply

%d bloggers like this: