[ Actress Trisha ] நாளை வெளியாகிறது திரிஷாவின் பரமபதம் திரைப்படம் !!-01

Actress Trisha

  Paramapadham Movie

நாளை வெளியாகிறது திரிஷாவின் பரமபதம் திரைப்படம்


தமிழ் சினிமாவில் திரிஷாவுக்கு என  எப்போதும் தனி ரசிகர் பட்டாளம்  உண்டு. நீண்டகாலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த திரிஷா இடையில் சிறிது காலம் சரியான படவாய்ப்புகள் அமையாமல் இருந்தவர் 96 படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து சினிமாவில் தனது இருப்பை உணர்த்தினார்.

இதை தொடர்ந்து பிறமொழிகள் உட்பட பல பட வாய்ப்புகள் திரிஷாவை தேடிவர தொடங்கின தமிழில் ராங்கி , பரமபத விளையாட்டு போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதில் பரமபதம் விளையாட்டு படத்தின் டீசர் 2019ஆம் ஆண்டுடே வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பரமபதம் விளையாட்டு திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Actress-Trisha

24 ஹவர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்கத்தில் வெளியாக உள்ள இப்படத்தில் திரிஷா, நந்தா, துரோபதி படத்தின் நாயகன் ரிச்சர்ட், இமான் அண்ணாச்சி, ஏ.எல்.அன்பழகன், வேல.ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகியிருக்க வேண்டிய பரமபதம் விளையாட்டு திரைப்படம் பல்வேறு காரணங்களால் தடைகளை சந்தித்து வந்தது இந்நிலையில் நாளை ஏப்ரல் 14ல் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகவுள்ளது.


Star Tamil News  |     Actress Trisha |        Paramapadham Movie

Leave a Reply

%d bloggers like this: