கபடி விளையாடி அசத்திய நடிகை ரோஜா -07

(Actress Roja) கபடி விளையாடி அசத்திய நடிகை ரோஜா.

தென்னிந்திய திரைத்துறையில் 90களில்  அதிக ரசிகர்களை கவர்ந்த முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.

பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தார் ஒருகட்டத்தில் அக்கட்சியிலிருந்து விலகி ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

கபடி

இன்றைய தினம் தனது தொகுதியில் கபடி போட்டி ஒன்றை தொடங்கி வைப்பதற்காக சென்ற  நடிகை ரோஜா ஆர்வம் மிகுதியில் வீரர்களுடன் இணைந்து தானும் கபடி விளையாடி அசத்தினார் இதனால் உற்சாகம் அடைந்த பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி ரோஜாவை உற்சாகப்படுத்தினார் தற்போது இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

%d bloggers like this: