[ Actress Roja ] நடிகை ரோஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!! -04

[ Actress Roja ]

நடிகை ரோஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி


90களில் தங்கள் நடிப்பால் அதிக ரசிகர்களை ஈர்த்த நடிகைகளுள் ஒருவர் நடிகை ரோஜா செம்பருத்தி என்கிற படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக அறிமுகமாகி அதன்பின் தனது நடிப்பு திறமையால் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை ரோஜா பின்னாட்களில் அரசியல் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.

தற்போது ஆந்திரா மாநில ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ரோஜாவிற்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி கர்ப்பப்பையில் உள்ள கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

Actress-Roja

இதுபற்றி நடிகை ரோஜாவின் கணவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளரிடம் தெரிவிக்கையில் தற்போது ரோஜாவுக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. பல மாதங்களுக்கு முன்பே இந்த அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் எனவும்.

ரோஜாவின் அலட்சியம் காரணமாக ஏற்பட்ட தாமதத்தினால் பாதிப்பு தீவிரமடைந்தது தற்போது பெரிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது. கடவுளின் அருளால் அறுவைசிகிச்சை நல்லபடியாக நடைபெற்றுள்ளது நடிகை ரோஜா உடல் நலம் தேறி வருகிறார்.

அடுத்த சில தினங்களுக்கு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே தயவு யாரும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என குறிப்பிட்டார்.


Star Tamil News                         Actress Roja

Leave a Reply

%d bloggers like this: