[ Actor Vivek ] நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார் !! -01

[ Actor Vivek ]

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார் !!


சென்னை:

மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் விவேக் ( வயது 59 ) இன்று அதிகாலை காலமானதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது நகைச்சுவைகள் மூலம் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்க்கும் நடிகர் விவேக் நேற்றைய தினம் பகல் சுமார் 10 மணி அளவில் தனது வீட்டில் மனைவி மற்றும் மகளுடன் அமர்ந்து உரையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக நடிகர் விவேக்கை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

Actor-vivek

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இருந்தும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. இதனால் இதயத்தை செயல்பட வைக்கும் எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் நடிகர் விவேக் காலமானதாக மருத்துவமனை தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விவேக் காலமானதாக வெளியான செய்தி தமிழக மக்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Star Tamil News              RIP Actor Vivek

Leave a Reply

%d bloggers like this: