[ Actor Vijay ] தளபதி 65 படப்பிடிப்பை நடத்த வேண்டாம் விஜய் வேண்டுகோள் !!

[ Actor Vijay ]

தளபதி 65 படப்பிடிப்பை நடத்த வேண்டாம் விஜய் வேண்டுகோள்


நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை தற்போதைக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென தயாரிப்பாளர் தரப்பிடம் விஜய் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளைய தளபதி விஜய் நடிக்கும் பெயர் வெளியிடப்படாத படத்தை தளபதி 65 என்னும் தற்காலிக பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார் படத்தில் விஜயின் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து முடிந்தது. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைபடத்தின் இசையை அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்துக்காக பிரம்மாண்டமான செட்டு அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது.

Actor-Vijay

Actor Vijay

Also Read : X பிரிவு பாதுகாப்பில் மேற்குவங்க பாஜக எம்எல்ஏக்கள் !!

 

ஆனால் தற்போது கொரோனா நோய் தொற்று 2வது அலை தீவிரமடைந்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. திரைத்துறையினர் பலரும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில் தளபதி 65 படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதை தவிர இயக்குனர் கேவி ஆனந்த், நகைச்சுவை நடிகர் விவேக், பாண்டு ஜோக்கர் துளசி போன்றோர் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் உயிரிழந்தது தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆகவே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை நீங்கி தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறும் வரை படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறபடுகிறது. மேலும் தன்னுடைய இந்த முடிவை தயாரிப்பாளர் தரப்புக்கும் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் தைபொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதால் இன்னும் கால அவகாசம் இருக்கிறது எனவும் தேவைப்படும் பட்சத்தில் படப்பிடிப்புக்கு தேவையான கால்ஷீட்களை தான் மொத்தமாக ஒதுக்கி கொடுப்பதாக நடிகர் விஜய் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படபிடிப்பை நிறுத்துவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும் இப்போதைக்கு தளபதி 65 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Also Read : தடுப்பூசியால் ஆண்மைக்குறைவு ஏற்படுமோ என அஞ்சும் கிராம மக்கள் !!


Star Tamil News  |   Actor Vijay

Leave a Reply

%d bloggers like this: