[ actor senthil ] நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்!!- 03

நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் என்னும் கிராமத்தில் பிறந்து சென்னைக்கு வந்து தனது கடின உழைப்பின் மூலம் சினிமாத்துறையில் 90களில் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகர் செந்தில்

நடிப்பை தவிர அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்ட செந்தில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டு அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார் 2011, 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் இவர் தமிழகம் முழுவதும் அதிமுக சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து இவர் அரசியலில் ஈடுபடாமல் விலகியே இருந்து வந்தார்.

Actor-senthil

Actor senthil

 

இந்நிலையில் இன்று பாஜகவின் தமிழக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எல் முருகனை சந்தித்து தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார் .

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் செந்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த  வரை அதிமுகவில் முக்கியதுவம் கிடைத்ததாகவும் ஜெயலலிதா மரணத்திற்கு பின் தான் புறக்கணிக்கபடுவதாக கருதியதால் வேறு ஒரு நல்ல கட்சியில் இனைந்து மக்களுக்காக உழைக்க நினைத்ததால் பாஜகவில் இனைந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

%d bloggers like this: